டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே!.. ராகுல் அட்டாக்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய எல்லையில் யாரும் நுழையவில்லை என்றாரே பிரதமர் நரேந்திர மோடி, ஆனால் செயற்கைகோள் படங்களை பார்த்தால் பாங்காங் ஏரி அருகே இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்தது தெளிவாக தெரிகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இதை சீன ராணுவம் உறுதி செய்யவில்லை.

கடந்த வாரம் நடந்த மோதலை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சிகளின் கூட்டம் வீடியோ கான்ஃபிரன்ஸிங் முறையில் நிகழ்ந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை. இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை என்றார்.

இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. "லே" மருத்துவர் தகவல்

கால்வன் பள்ளத்தாக்கு

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். யாரும் ஊடுருவவில்லை எனில் சண்டை நிகழ்ந்தது ஏன், 20 இந்திய வீரர்களை நாம் இழந்தது ஏன் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் கால்வன் பள்ளத்தாக்தை சீனா ஆக்கிரமித்துவிட்டது.

பிரதமர்

பிரதமர்

இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார், பிரதமர் என குறிப்பிட்டிருந்தார் ராகுல்காந்தி. அது போல் ஜப்பான் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் நரேந்திர மோடி சரண்டர் மோடியாகிவிட்டார் என கடுமையாக ராகுல் விமர்சனம் செய்திருந்தார்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்த நிலையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் இந்தியில் பதிவிட்டிருந்தார். அவர் கூறுகையில் நமது எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என்றும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஆனால் செயற்கைகோள் புகைப்படங்களை பார்த்தால் பாங்காங் ஏரி பகுதியில் நமது இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது தெரிகிறது. மோதல் அன்று இந்திய எல்லையை அத்துமீறி சீனா நுழைந்ததும் தெரியவந்துள்ளது என ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு டிவி சேனலில் வந்த புகைப்படத்தை அவர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    ஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்- பிரதமர் மோடி அதிரடி

    English summary
    Congress Ex president Rahul Gandhi says that Satellite images shows China has crossed LAC and entered into India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X