டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள்.. காங்கிரஸ் ஆவேச பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அப்போது ராகுல் காந்தி அந்த கூட்டத்தில் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவி எப்போது?... ஜெ.அன்பழகன் பதில் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவி எப்போது?... ஜெ.அன்பழகன் பதில்

வலிமை வாய்ந்தவர்கள்

வலிமை வாய்ந்தவர்கள்

அவர் கூறுகையில் நாம் 52 எம்பிக்கள் இருக்கிறோம். பாஜகவுக்கு எதிராக 52 எம்பிக்களும் கடுமையாக போராட முடியும் என நான் உறுதி அளிக்கிறேன். நாம் 52 பேர்தான். ஆனால் அவர்கள் 303 பேர் என்றாலும் அவர்களை காட்டிலும் நாம் வலிமை வாய்ந்தவர்களாக உள்ளோம்.

போராட வேண்டும்

போராட வேண்டும்

நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக போராடுகிறீர்கள் என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் எம்பியும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள மக்களின் ஜாதி, மதங்களை கடந்து அவர்களுக்காக போராட வேண்டும்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

பாஜக எம்பிக்கள் வெறுப்பு மற்றும் கோபத்தால் நம்முடன் மோத நினைப்பர். நீங்கள் அதை ஜாலியாக வேடிக்கை பார்க்க போகிறீர்கள். ஆனால் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.

ராகுல் வாழ்த்து

சுயபரிசோதனை செய்து கொள்வதற்காகவும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்காகவும் நேரம் வந்துவிட்டது என்றார் ராகுல்காந்தி. லோக்சபாவின் காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சோனியா காந்திக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் வலிமையான எதிர்க்கட்சி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றும் கட்சி என்பதை காங்கிரஸ் நிரூபிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Rahul Gandhi says that 52 MPs should ve very aggressive in Parliament. We are as strong as the BJP MPs whose strength is 303.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X