டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வீடியோ கேம் என விமர்சனம்.. ராணுவத்தை அவமதித்த மோடி.. ராகுல் சுளீர்

Google Oneindia Tamil News

டெல்லி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலை வீடியோ கேம் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது மிகப் பெரிய பிரச்சினை வேலையின்மை ஆகும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என மோடி உறுதி அளித்தார். அந்த உறுதி என்னவாயிற்று?

வேலைவாய்ப்புகள் மற்றும் விவசாயிகள் குறித்து அவர் ஒரு வார்த்தைகள் கூட பேசவில்லை. அவரிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ராணுவம், கடற்படை, விமான படை ஆகிய முப்படைகளும் தனக்கு சொந்த சொத்து போல் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மே.வங்கம்: மமதா அள்ளப் போகும் முஸ்லீம் வாக்குகள்.. இந்துக்களை வளைத்த பாஜக.. பரிதாப காங், கம்யூ.! மே.வங்கம்: மமதா அள்ளப் போகும் முஸ்லீம் வாக்குகள்.. இந்துக்களை வளைத்த பாஜக.. பரிதாப காங், கம்யூ.!

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வீடியோ கேம் விளையாட்டு என கூறியுள்ளார் மோடி. இதன் மூலம் அவர் காங்கிரஸை அவமதிக்கவில்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

மாறாக நமது ராணுவத்தையே அவமதித்துவிட்டார். காவலாளிதான் திருடன் என்பதே எங்கள் கோஷம். அதிலிருந்து ஒரு போதும் மாற மாட்டோம். திருடன் என விமர்சனம் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மன்னிப்பு கேட்டேன். மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்பேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் ராகுல்காந்தி.

நிராகரிப்பு

நிராகரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் பாஜக ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் கேலி செய்தனர். பிறகு நிராகரித்தனர். பின்னர், எதிர்த்தனர். தற்போது, நாங்களும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே பொய்.

விமர்சனம்

இந்த தலைவர்கள் வீடியோ கேம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில், துல்லிய தாக்குதலை ரசித்தவர்கள், அதை ஒருவகை விளையாட்டு என்று கருதி விட்டார்கள் போலும் என்று மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Rahul Gandhi: The Army,Air Force or Navy are not personal properties of Narendra Modi ji like he thinks. When he says that surgical strikes during UPA were done in video games then he is not insulting Congress but the Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X