டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்களின் கோழைத்தனம்தான் நம் மண்ணில் சீனா ஊருடுவ முழு காரணம்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தின் திறமை, வீரம் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Recommended Video

    சீனாவை எதிர்க்க இந்தியா அஞ்சுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் உரையாற்றினார். அதில் லடாக் முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை நம் மண் மீது கண் வைக்கும் எதிரிகளுக்கு நமது ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் இந்திய ராணுவத்தின் திறமை மற்றும் வீரம் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. பிரதமரை தவிர்த்து அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் வீரம் நன்றாக தெரியும்.

    லடாக்,,,பாங்காங் டிசோ... பகுதிகளில் இந்திய திபெத் படை... தேசியக்கொடி ஏற்றி... முழக்கம்!! லடாக்,,,பாங்காங் டிசோ... பகுதிகளில் இந்திய திபெத் படை... தேசியக்கொடி ஏற்றி... முழக்கம்!!

    ஆக்கிரமிக்க

    ஆக்கிரமிக்க

    யாருடைய கோழைத்தனம் இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது? யாருடைய பொய்கள் சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்ததை உறுதி செய்தது? இவை அனைத்துமே அனைவருக்கும் தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பாங்சோ ஏரி பகுதியில் ஆக்கிரமித்த சீனா ராணுவம் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டது. இதில் 20 பேர் வீரமரணமடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்கியதில் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். யாரும் ஊடுருவவில்லை என அப்போது பிரதமர் மோடி கூறியிருந்தார். யாரும் ஊடுருவாமல் எல்லையில் எதற்காக மோதல் ஏற்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

    கண்டனம் இல்லை

    கண்டனம் இல்லை

    இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என ராகுல்காந்தியும் , காங்கிரஸ் மூத்த தலைவர்களும் , மற்ற எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினர். சீனாவின் பெயரை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை

    சென்னை

    கடந்த அக்டோபர் மாதம் சென்னை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் பேசியது என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும், நேற்று சுதந்திர உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் இந்தியாவிலிருந்து ஒரு பிடி மண்ணை கூட மற்றவர்கள் எடுக்க முடியாது என குறிப்பிடுகிறார்களே தவிர பாகிஸ்தானை போல் சீனாவின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தயக்கம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English summary
    Congress EX President Rahul Gandhi says that each and everyone knows the brave of our Indian Army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X