டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வருஷமாக மக்களிடம் கருத்து கேட்டு உருவாக்கிய தேர்தல் அறிக்கை.. ராகுல் காந்தி பெருமிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 54 பக்க தேர்தல் அறிக்கை பூட்டிய அறையில் உட்கார்ந்து கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சுமார் 54 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார்.

    அவர் பேசுகையில் சுமார் ஓராண்டாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்தனர்.

    Breaking News Live: நீட் தேர்வை திணிக்க மாட்டோம்- காங். தேர்தல் அறிக்கையில் செம அறிவிப்பு Breaking News Live: நீட் தேர்வை திணிக்க மாட்டோம்- காங். தேர்தல் அறிக்கையில் செம அறிவிப்பு

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன். ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிக்கை என்பது மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இதில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    வறுமை

    வறுமை

    செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் மட்டுமே தேர்தல் அறிக்கையில் இருக்கும். தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படும், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், 2030-க்குள் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படும்.

    அறிக்கை

    அறிக்கை

    ஜிஎஸ்டியில் உள்ள கடுமையான அம்சங்கள் நீக்கப்படும். அரசு துறையில் காலியாக உள்ள 22 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும், தேச விரோத தடை சட்டம் நீக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த அறிக்கையில் காணப்படுகிறது என்றார் ராகுல் காந்தி.

    English summary
    Congress President Rahul Gandhi releases election manifesto and says that it was not created in locked room.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X