டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலாவின் உரை பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்டது.. ஆனால் அதில் ஒன்றும் இல்லையே.. ராகுல்காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்மலா உரை பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட உரையாக இருக்கலாம். ஆனால் அதில் ஒன்றுமே இல்லையே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

Rahul Gandhi says that though it was the longest Budget speech

மிக நீண்ட உரையால் சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் தனது உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டார். அவர் சுமார் 2.21 மணி நேரம் பட்ஜெட் உரையை ஆற்றினார்.

நிர்மலா ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்த போது எம்பிக்கள் மேஜையை தட்டி ஊக்கப்படுத்தினர். இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அவர் கூறுகையில் பட்ஜெட் வரலாற்றில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை மிக நீளமான உரையாகும். அதில் ஒன்றுமே இல்லை. வெறும் வெற்று வார்த்தைகள்தான் உள்ளன. இந்தியாவில் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்.

நெற்றியில் வியர்வை.. 2 பேஜ்தான் இருக்கு.. 2.42 மணி நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்ட்நெற்றியில் வியர்வை.. 2 பேஜ்தான் இருக்கு.. 2.42 மணி நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்ட்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் இருப்பதாக தெரியவில்லை. பட்ஜெட்டில் அரசு குறித்த புகழாரமும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது, பரபரப்பாக சொல்வது உள்ளிட்டவை அரசின் மனநிலையாகும். மற்றபடி பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என தெரிவித்தார் ராகுல் காந்தி.

English summary
Budget 2020: Congress Ex President Rahul Gandhi says that though it was the longest Budget speech. It has hollow. It doesnt contain anything new.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X