டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

Rahul Gandhi says that Violence is not the solution for any problem

இதில் டிராக்டர்களை எடுத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சித்தார்கள். அப்போது கலவரம் ஏற்பட்டது, போலீஸார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

தமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு தமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

பின்னர் போலீஸாரின் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு வருகிறார்கள். அங்கு விவசாய சங்க கொடியை ஏற்றினர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.

Rahul Gandhi says that Violence is not the solution for any problem

வன்முறையால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்தும். நாட்டின் நலனுக்காக விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என ராகுல் தெரிவித்துள்ளார்.

English summary
Congress EX President Rahul Gandhi says that Violence is not the solution for any problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X