டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். புதிய தலைவர் யார்? ராகுல் கூறிய ஒற்றை வரியில் அடங்கியிருக்கும்.. அத்தனை கேள்விகளுக்கான பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் உட்பட பல்வேறு தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்பது குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்,

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொண்டது. ஒரு சில மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் முறையான கூட்டணியைக் காங்கிரஸ் அமைக்கவில்லை,

இதனால் காங்கிரஸ் மிக மோசமான ஒரு தோல்வியை 2019 மக்களவை தேர்தலில் தழுவியது. அக்கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி கிட்தட்ட வாஷ்அவுட் ஆனது.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல்.. காங்.கின் அடுத்த மூவ் என்ன? லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல்.. காங்.கின் அடுத்த மூவ் என்ன?

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதையடுத்து இந்த மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அப்போதைய பல்வேறு மூத்த தலைவர்களும் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும், ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அப்போது தொடங்கிய குழப்பம் காங்கிரசில் இப்போது வரை தொடர்கிறது.

 தலைவர்கள் வலியுறுத்தல்

தலைவர்கள் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இதற்கு முன்னரும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே ஆண்டனி ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்,

 பரிசீலனை செய்வேன்

பரிசீலனை செய்வேன்

குறிப்பாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பது குறித்து பரிசீலனை செய்வேன் எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த செயற்குழுவில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப். 20க்குள் தேர்வு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் வலியுறுத்துவது இது முதல் முறை இல்லை, கடந்த டிசம்பர் மாதம் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா "99.9 சதவீதம் பேர் ராகுல் காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்" என்றார். அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் டெல்லி காங்கிரஸ் கமிட்டி ராகுல் தலைவராக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. ஆனால், இதுவரை இந்த கோரிக்கைகளை ராகுல் காந்தி ஏற்கவில்லை. நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைவராக வேண்டும் என்றே ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

 ஜி 23 தலைவர்கள்

ஜி 23 தலைவர்கள்

ஒருபுறம் இந்த சிக்கல் என்றால், மறுபுறம் ஜி 23 என்று அழைக்கப்படும் அக்கட்சியின் மூத்த 23 தலைவர்கள் ராகுல் குறித்தும் கட்சியின் தலைமை காலியாக உள்ளது குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஜி-23 தலைவர்கள் கடந்த ஆண்டு சோனியா காந்திக்குக் கடிதமும் எழுதினர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 ஊடகம் வழியாகப் பேசத் தேவையில்லை

ஊடகம் வழியாகப் பேசத் தேவையில்லை

இதற்கிடையே தான் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் இல்லை எனச் சிலர் சொல்கிறார்கள். நான்தான் காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர்கள் நான் எப்போதும் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டியுள்ளேன். யாரும் இங்கே ஊடகம் வழியாக என்னிடம் பேச வேண்டிய தேவை இல்லை.

 நேர்மையான விவாதம்

நேர்மையான விவாதம்

நேர்மையான சுதந்திரமான இந்த விவாதத்தை நான்கு சுவரில் இங்கே நம் நடத்துவோம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை மட்டுமே வெளியே சொல்வோம். நான் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் பேசி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் நாம் இணைந்து செயல்பட வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன, இப்போது இருக்கும் சூழலில் நான் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். சுய விருப்ப வெறுப்புகளை புறந்தள்ளி கட்சியின் நலனுக்காக முடிவெடுக்க வேண்டும்" என்று பேசினார்.

English summary
Rahul Gandhi has said he "will consider" returning as Congress President. Congress Committee leader election. latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X