டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன?.. உரையாடலை வீடியோவாக வெளியிட்ட ராகுல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 20-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தான் நடத்திய உரையாடல் குறித்தும் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் குறித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ஹரியானாவிலிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு டெல்லி வழியாக 20-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சுக்தேவ் விகார அருகே அவர்களை கண்ட ராகுல் காந்தி தனது காரை நிறுத்தி அவர்களிடம் உரையாற்றினார்.

மேலும் அவர்கள் சொந்த ஊர் திரும்ப கார்கள் மற்றும் மினி பேருந்துகளை ஏற்பாடு செய்தார். இந்த நிலையில் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி நடத்திய உரை குறித்தும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா!

சகோதரிகள்

சகோதரிகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில் இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத ஹீரோக்களான புலம்பெயர்ந்த சகோதர, சகோதரிகளுடன் உரையாற்றினேன். கடந்த சில வாரங்களாக சொல்லொண்ணா துயரத்தையும் வன்முறையையும் அநீதியையும் சந்தித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

இதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் புலம்பெயர்ந்த சகோதர, சகோதரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உணவே இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் வழியில் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். எனினும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே செல்கிறார்கள்.

ஜான்சி

ஜான்சி

அவர்களிடம் நான் நடத்திய உரையாடல் மூலம் அவர்கள் நினைப்பது என்ன, என்ன எதிர்பார்க்கிறார்கள், எப்படி அச்சமடைந்துள்ளார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் என்றார். அந்த வீடியோவில் ஜான்சியை சேர்ந்த மகேஷ்குமார் கூறுகையில் நாங்கள் 150 கி.மீ, தூரம் ஏற்கெனவே நடந்துவிட்டோம். இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.

மார்ச் மாதம்

மார்ச் மாதம்

இன்னொரு புலம்பெயர்ந்த பெண் கூறுகையில் இந்த ஊரடங்கால் வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உண்மையிலேயே எங்களை போன்ற ஏழை மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 3 தினங்களாக நாங்களும் எங்கள் குழந்தைகளும் பட்டினி கிடக்கிறோம் என்றார். லாக்டவுன் குறித்து எப்போது தெரியும் என ராகுல் அவர்களிடம் கேட்டபோது, மார்ச் 22-ஆம் தேதி ஊரடங்கு என்பது மார்ச் 21 ஆம் தேதிதான் எங்களுக்கு தெரிந்தது.

2500 வாடகை

2500 வாடகை

எனினும் உடனடியாக இந்த லாக்டவுன் அமலுக்கு வந்துவிட்டது. எங்களுக்கு குறைந்தபட்சம் 4 நாட்களாவது கால அவகாசம் வழங்கியிருக்கலாம். இரு மாதங்கள் காத்திருந்த நிலையில் நடந்தே சொந்த ஊர் செல்வோம் என முடிவு செய்தோம். லாக்டவுன் நீடித்துக் கொண்டே செல்வதால் நாங்கள் இங்கு இருந்து என்ன செய்வது? 3ஆவது கட்ட லாக்டவுனுக்கு பிறகு என்ன செய்வது என எங்களுக்கு தெரியவில்லை. மாதம் ரூ 2500 வாடகை. எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை.

வாகன ஏற்பாடு

வழியில் யாராவது ஏதேனும் கொடுத்தால் வாங்கி உண்கிறோம். எங்கள் உயிரை காத்துக் வேண்டுமே என்ன செய்வது. கொரோனா வைரஸை விட பசியே எங்களுக்கு வேதனையை தருகிறது. நாங்கள் அரசிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களை சொந்த ஊரில் கொண்டு சேர்த்து வேலை வழங்குவதுதான் என்றனர். இறுதியாக அவர்களது வேண்டுகோளின்படி ஜான்சிக்கு செல்ல கார், மினி பேருந்தை ராகுல் ஏற்பாடு செய்தார்.

English summary
Congress MP and EX President of the Party Rahul Gandhi shared the thoughts of Migrant workers who returns to their villages. He shared in his you tube channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X