டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேட்பாரற்று சடலங்கள்.. பீகார் அரசின் நல்லாட்சியை பாருங்க.. ராகுல் காந்தி பரபரப்பு ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பீகாரில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு என்பது கை மீறிப் போய்விட்டது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாட்னாவின் நாலந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பீகாரின் முதல் பிரத்யேக கொரோனா வைரஸ் நோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அங்கு மத்திய குழு சென்றபோது, அங்கு கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலங்கள் கேட்பாரற்று கிடந்ததுள்ளது. இது உள்ளூர் டிவி மீடியாக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Rahul Gandhi slams Bihar govt for unclaimed bodies in Covid wards

இப்படி, கொரோனா பாதித்தவர் உடல் கிடந்தால், பிறருக்கு பரவும் வாய்ப்பு இருப்பதை மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டு எச்சரிக்கிறார்கள்.

சூப்பர் ஸ்பிரெடர்களை உருவாக்கிவிடும் நிலை அங்கே நிலவுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்தி, ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், பீகாரில் கொரோனா நிலை மிகவும் மோசமாக உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொரோனா பரவல் இல்லை. மருத்துவமனை வார்டில் உரிமை கோரப்படாத சடலம் கிடப்பது, பீகார் அரசாங்கத்தின் 'நல்லாட்சியை' அம்பலப்படுத்துகிறது.இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் கலாட்டாவுக்கு இடையே ராஜஸ்தானில் பரபரப்பு.. 2 கார்களில் ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்அரசியல் கலாட்டாவுக்கு இடையே ராஜஸ்தானில் பரபரப்பு.. 2 கார்களில் ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்

மற்றொரு ட்வீட்டில், ராகுல் காந்தி கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் அரசின் சாதனைகள்:

  • பிப்ரவரி - ஹலோ டிரம்ப்
  • மார்ச் -மத்திய பிரதேச அரசை கவிழ்த்தது
  • ஏப்ரல் - மெழுகுவர்த்தி ஏற்றியது
  • மே - அரசின் 6 ஆம் ஆண்டு விழா
  • ஜூன் - பீகாரில் 'விர்ச்சுவல்' பேரணி
  • ஜூலை - ராஜஸ்தானில் அரசு கவிழ்க்க முயற்சிக்கிறது

இப்படித்தான், கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவை அடைந்தது'

இவ்வாறு ராகுல் காந்தி ஹிந்தி மொழியில் ட்வீட் செய்திருந்தார்.

English summary
Congress leader Rahul Gandhi on Tuesday attacked the Nitish Kumar-led Bihar government for its alleged mismanagement of the Covid-19 outbreak in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X