டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணமதிப்பிழப்பைவிட பேரழிவு.. பாதிக்கப்படப்போவது ஏழைகள்.. ராகுல் காந்தி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) விவகாரம் தொடர்பாக அரசை கடுமையாக தாக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இவை 2016 நவம்பரில் கொண்டுவரப்பட்ட, பணமதிப்பிழப்பைவிட பேரழிவை தரப்போகிறது என்று எச்சரித்தார்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையே, அனைத்து ஏழை மக்களையும், அவர்கள் இந்தியர்களா இல்லையா என்று கேட்பதுதான்.

Rahul Gandhi slams govt over NPR, NRC; says it will be more disastrous than demonetisation

"அவரது (பிரதமர் நரேந்திர மோடி) 15 நண்பர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டிய அவசியமில்லை, அந்த 15 பேர் பைகளுக்கு மட்டும் பணம் செல்லும்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"15 முதலாளிகள் நலனுக்காக அரசு செயல்படுகிறது என்ற தனது குற்றச்சாட்டை ராகுல் காந்தி இவ்வாறு மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மக்களுக்கு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும், பணமதிப்பிழப்பு பாதிப்பைவிட இரு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும், என்றும் அவர் கூறினார்.

பல்லாயிரம் பேர்.. குடும்பத்தோடு வீதிக்கு வந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.. சென்னையில் பெரும் பேரணிபல்லாயிரம் பேர்.. குடும்பத்தோடு வீதிக்கு வந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.. சென்னையில் பெரும் பேரணி

காங்கிரஸ் கட்சியின் 135 வது நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தலைமையகத்தில், கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இதையொட்டி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இவ்வாறு, கூறினார்.

English summary
Attacking the government over the issue of the National Population Register (NPR) and the National Register of Citizens (NRC), Congress leader Rahul Gandhi on Saturday said these exercises will be more disastrous than the note ban in November 2016. The basic idea of these exercises is to ask all poor people whether they are Indian or not, he told reporters on the sidelines of the flag-hoisting ceremony at the AICC headquarters here on the occasion of 135th foundation day of the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X