"தேச துரோகம்.." ஆர்எஸ்எஸ் தலைவர் மீது உடனே வழக்கு போட்டு ஆக்ஷன் எடுக்கணும்! ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் நிறுவப்பட்ட நாளை தான் சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது பரபரப்பைக் கிளப்பியது. இந்த பேச்சை இப்போது கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, மோகன் பகவத் பேசியது தேச துரோகம் என்றும் இதுபோன்ற பேச்சுகளை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஆவேசமாக விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் 24, அக்பர் ரோட்டில் இயங்கி வந்தது. கடந்த 27 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக அதுவே இருந்து வந்தது.

புதிய அலுவலகம்:
இருப்பினும், அங்கு இடநெருக்கடி பெரிய சிக்கலாக இருந்தது. இதையடுத்து அங்குள்ள கோட்லா சாலையில் உள்ள 9 ஏ என்ற இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இதன் கட்டுமானம் நடந்து வந்த சூழலில் ஒரு வழியாக பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இன்று கட்டிடத்தை அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இதில் அக்கட்சியின் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி:
அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். மோகன் பகவத்தின் பேச்சுக்களைத் தேச துரோகம் என்று சாடிய அவர், மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாக இருப்பதாகவும் சாடினார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "1947ல் இந்தியா ஒருபோதும் சுதந்திரம் அடையவில்லை என்று நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.. ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அவர் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் இல்லை என்று சொல்லி, அரசியலமைப்பைத் தாக்கி மோகன் பகவத் பேசியுள்ளார்.
தேச துரோகம்:
சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்பு குறித்த எவரது எண்ணம் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்துவதாகவே அவரது பேச்சு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் செல்லாது என்று மோகன் பகவத் நேற்று கூறியது உண்மையில் தேசத்துரோகம். வேறு எந்த நாட்டிலாவது இதுபோல யாராவது கூறியிருந்தார். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். 1947ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற பேச்சுகளை நாம் அனுமதிக்க முடியாது.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடியை வணங்குவதில்லை.. அவர்களுக்கு இந்தியா குறித்து முற்றிலும் ஒரு மாறுபட்ட பார்வை இருக்கிறது. இந்தியா ஒரு நிழல் உலக, சீக்ரெட் சமூகத்தால் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்களின் குரலை நசுக்க நினைக்கிறார்கள்... காங்கிரஸைத் தவிர அவர்களைத் தடுக்க இந்த நாட்டில் வேறு எந்தக் கட்சியும் இல்லை. எங்களின் சித்தாந்தம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வேறுபட்டது.
பாஜக மீது தாக்கு:
நமது நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. கடந்த செயற்குழுக் கூட்டத்தில், மகாராஷ்டிரத் தேர்தல் குறித்து விவாதித்தோம். இப்போது தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்தும் விதம் சரியாக இருப்பது போலத் தெரியவில்லை" என்று விமர்சித்துப் பேசினார். மேலும், புதிய தலைமை கட்டிடம் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மோகன் பகவத் பேசியது என்ன:
முன்னதாக நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த நாளை தான் நாம் உண்மையான சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும். பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்கொண்ட இந்தியாவின் உண்மையான சுதந்திரம் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட போது தான் நிறுவப்பட்டது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட விஷனில் நாடு இயங்க வேண்டும் என்பதற்காக அந்த ஆவணத்தை உருவாக்கினார்கள். ஆனால், அது நாட்டு மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications