டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அர்னாப்புடன் வாக்குவாதம்- நடிகர் குணால் கம்ராவுக்கு விமானத்தில் பயணிக்க தடை- ராகுல் கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அர்னாபிடம் தவறாக நடந்துகொண்ட நகைசுவை பேச்சாளருக்கு தடை

    டெல்லி: ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியதால் காமெடி நடிகர் குணால் கம்ராவுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ விமானத்தில் அர்னாப் கோஸ்வாமி பயணம் செய்து கொண்டிருந்தார். அதே விமானத்தில் பாலிவுட் காமெடி நடிகர் குணால் கம்ராவும் பயணித்தார்.

    Rahul Gandhi slams On Airlines ban to Comedian Kunal Kamra

    அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் சி.ஏ.ஏ. போராட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக குணால் கம்ரா சரமாரி கேள்விகளை எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.

    இந்நிலையில் குணால் கம்ரா, 6 மாதம் தங்களது விமானத்தில் பறக்க இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தமது ட்விட்டர் பக்கத்தில் இதர விமான நிறுவனங்களும் குணால் கம்ராவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குணால்.. விமானத்தில் பகீர்.. கடைசியில் இப்படி ஆகிட்டேஅர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குணால்.. விமானத்தில் பகீர்.. கடைசியில் இப்படி ஆகிட்டே

    பின்னர் ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா , கோ ஏர் ஆகிய விமான நிறுவனங்களும் குணால் கம்ராவுக்கு தடை விதிப்பதாக அறிவித்தன. இத்தடைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில், அரசின் செல்வாக்குடன் குணால் கம்ராவுக்கு தடை விதித்து அவரது விமர்சன குரலை ஒடுக்கப் பார்ப்பது கோழைத்தனமானது என அர்னாப் கோஸ்வாமியை மறைமுகமாக சாடியுள்ளார் ராகுல் காந்தி. மேலும், செய்தி கேமராக்களை தங்களது பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறவர்கள் கேரமா தங்களை நோக்கி திரும்பும்போது முதுகெலும்பை காட்டியிருக்க வேண்டும் எனவும் ராகுல் பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநர் அருண்குமார், குணால் கம்ராவுக்கு உடனடியாக விமானத்தில் பறக்க இண்டிகோ நிறுவனம் தடை விதித்தது விதிகளை மீறிய செயல். உரிய விசாரணைகளுக்குப் பின்னர்தான் விமானத்தில் பறக்க தடை விதித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Congress's Senior leader Rahul Gandhi has slammed that the move of airlines to ban comedian Kunal Kamra for heckling a television channel editor Aranb Goswami on an IndiGo flight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X