டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெட்கப்பட வேண்டும்.. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சர்ச்சை பற்றி ராகுல் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சர்ச்சை... பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்- வீடியோ

    டெல்லி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த முன்னாள் ராணுவ அதிகாரி (லெப்டினன்ட் ஜெனரல்) டி.எஸ்.ஹூடா கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

    சண்டீகரில் நிகழ்ச்சியொன்றில் சமீபத்தில், பங்கேற்று பேசிய ஹூடா, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பாக ரொம்பவே அதிகமாக ஹைப் கொடுக்கப்பட்டுவிட்டது. இது தேவையற்றது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதை ரகசியமாகச் செய்திருக்க வேண்டும் என்றார்.

    Rahul Gandhi slams PM for politics over surgical strikes

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உண்மையான ராணுவ வீரனாக ஹூடா இதைப் பேசியுள்ளார். இந்தியா இவரால் பெருமைப்படுகிறது. மிஸ்டர்36 (மோடி) நமது ராணுவத்தைத் தனது சொந்த சொத்து போலப் பயன்படுத்தியதற்காக வெட்கப்படவில்லை. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை தனது அரசியல் மதிப்புக்குப் பயன்படுத்துகிறார். ரபேல் ஒப்பந்தத்தை, அணில் அம்பானி சொத்து மதிப்பை உயர்த்தப் பயன்படுத்துகிறார் என்று காட்டமாக தெரிவித்தார்.

    இதனிடையே, வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறுகையில், ராணுவ பார்வையில், அது ஒரு வெற்றிகரமான ஆபரேஷன். பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தெளிவான ஒரு மெசேஜை கொடுத்தது. எல்லையில் அத்துமீறுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்பதுதான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாகிஸ்தானுக்கு காண்பித்த பாடம் என்றார்.

     மெகா கூட்டணி இருக்கட்டும்... பிரதமர் வேட்பாளர் யாரு?.. பாஜக நக்கல்! மெகா கூட்டணி இருக்கட்டும்... பிரதமர் வேட்பாளர் யாரு?.. பாஜக நக்கல்!

    ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ஹூடா கருத்து தனிப்பட்ட யூகம். அவர் இந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்ற முக்கிய அதிகாரி. அவரது வார்த்தைகளை நான் பெரிதும் மதிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Congress president Rahul Gandhi on Saturday latched on to the remarks of the Army officer who had overseen the 2016 surgical strikes across the LoC to train his guns at Prime Minister Narendra Modi for using them to gain political capital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X