டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா, கோவா அரசியல் குழப்பம்.. போராட்டத்தில் குதித்த சோனியா காந்தி, ராகுல்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவா மாநிலத்தை சேர்ந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி எம்எல்ஏக்களில் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இரு மாநிலங்களிலும் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் செய்தனர்.

Rahul Gandhi, Sonia Gandhi protest against horse-trading by the BJP

இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்', 'ஜனநாயகத்தைப் படுகொலை செய்யாதே' போன்ற வாக்கியங்களுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள், என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதனிடையே, பாஜக தவிர்த்த பிற கட்சி அரசுகளை அகற்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளை தனது கட்சி கண்டிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

"பணம் மற்றும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும், வாக்குப் பதிவு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலமும், பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது, ஆனால் இப்போது 2018 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அது எதிர்கொண்ட தோல்வியால் ஏற்பட்ட ஆத்திரத்தை தீர்க்க பாஜக அல்லாத மாநில அரசுகளை அகற்றுவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது.

"கர்நாடகாவிலும் கோவாவிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பாஜக மீண்டும் வாங்க முயற்சிப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீது விழுந்துள்ள களங்கமாகும். கட்சித் தாவல்களை முடிவுக்குக் கொண்டுவர கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது". இவ்வாறு மாயாவதி கண்டித்துள்ளார். ஏற்கனவே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி,

English summary
Rahul Gandhi and senior leaders of the Congress Party protest outside the Parliament against allegedly horse-trading by the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X