டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தன்னை எம்பியாக்கிய வயநாடு மக்களுக்கு.. இன்று வந்து ராகுல் காந்தி தரப்போகும் சர்ப்பைரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து எம்பியாக தேர்வான பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (இன்று) ராகுல் வருகிறார். இந்த 3 நாள்களும் வயநாடு மக்களோடு தங்கி, அவர்களை சந்தித்து பேசி நன்றி தெரிவிக்கப் போகிறாராம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியிலும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

இதில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.அதேநேரம் வயநாடு தொகுதியில் இடதுசாரி முன்னணி வேட்பாளரை சுமார் 4லட்சத்து 31 ஆயிரத்து 63 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி தோற்கடித்தார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக தென்மாநிலமான கேரளாவில் இருந்து எம்பியாக தேர்வாகி உள்ளார்.

கடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல! கடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல!

டுவிட் போட்ட ராகுல்

டுவிட் போட்ட ராகுல்

மே24ம் தேதி தேர்தல் முடிந்த மறுநாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எம்பியாக தேர்வு செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் பதிவு வெளியிட்டு இருந்தார்.

காங்கிரஸ் தொண்டர்கள்

காங்கிரஸ் தொண்டர்கள்

அதில் நாட்டு மக்களின் முடிவுகளை நான் மதிக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். என்னை மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்த வயநாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தேர்தலில் கடினமாக உழைத்த முயற்சி செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியிருந்தார்.

6 இடங்களில் பேரணி

6 இடங்களில் பேரணி

இந்நிலையில் தன்னை எம்பியாக தேர்வு செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள்கள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை வயநாடு வர உள்ளார். வயநாடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மொத்தம் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்த உள்ளார். கல்பேட்டா நகரில் காலை 10.30 மணிக்கும், இரண்டாவதாக கம்பல்காட்டில் 11.45 மணிக்கும், அடுத்ததாக பனமரத்தில் 12.30 மணிக்கும், மனந்தவாடியில் 2 மணிக்கும், பில்பாலியில் 3 மணிக்கும்,, பதேரியில் 4.30 மணிக்கும் பேரணி நடத்துகிறார்.

விவசாயி குடும்பத்தை சந்திக்கிறார்

விவசாயி குடும்பத்தை சந்திக்கிறார்

அத்துடன் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் மற்றும் திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வறு பொதுக்கூட்டங்களிலும் ராகுல் காந்தி பேச உள்ளார். மேலும் அண்மையில் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் அவர்களின் குடும்பத்தினரையும் ராகுல்காந்தி சந்திக்க திட்டமிட்டு உள்தாக வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

English summary
congress Rahul Gandhi to a three-day visit Wayanad district after winning lok sabha poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X