டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனது தந்தை விசாலமான பார்வை கொண்டவர்... அவர் இன்று இல்லை... ராகுல் காந்தி வருத்தம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: '''மிகப்பெரிய விசாலமான பார்வை கொண்டிருந்தவர் எனது தந்தை. அவரை இன்று நாம் இழந்து இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறோம்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தையின் 76வது பிறந்த நாளில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி முதல் காங்கிரஸ் தலைவர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

Rahul Gandhi tweet says Rajiv Gandhi was a man with a tremendous vision on his birthday

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''ராஜீவ் காந்தி ஒரு மகத்தான பார்வை கொண்ட மனிதர், அவரது காலத்திக்ரு முன்பாகவே தீர்க்கமாக எதிர்காலம் குறித்து அறிந்து செயல்பட்டவர். இவற்றுக்கு எல்லாம் மேலாக அவர் ஒரு இரக்கமுள்ள, அன்பான மனிதர். அவரை தந்தையாக நான் பெற்று இருப்பதை அதிருஷ்டமாக கருதுகிறேன். அவரை இன்று நாம் இழந்து இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இழந்து வருகிறோம்'' என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் - பிரியங்கா காந்தி

    டெல்லியில் இருக்கும் ராஜீவ் காந்தியின் வீர் பூமியில் இன்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். வீர் பூமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    கமலா ஹாரீஸ் சொன்ன ஒரு தமிழ் வார்த்தை.. கூகுளில் வலை வீசி தேடி பார்த்த அமெரிக்கர்கள்! கமலா ஹாரீஸ் சொன்ன ஒரு தமிழ் வார்த்தை.. கூகுளில் வலை வீசி தேடி பார்த்த அமெரிக்கர்கள்!

    பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ''மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

    Rahul Gandhi tweet says Rajiv Gandhi was a man with a tremendous vision on his birthday

    தனது தாயும், பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி 1984ஆம் ஆண்டில் பதவியேற்றார். அந்த ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டு இறந்தார். தனது 40வது வயதில் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்று இருந்தார். ராஜீவ் காந்தி 1944 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். விடுதலைப் புலிகளால் இவர் 1991, மே 21ஆம் தேதி சென்னை அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். இவர் உயிரிழந்த தினமும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Rahul Gandhi tweet says Rajiv Gandhi was a man with a tremendous vision on his birthday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X