டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். தலைவர்-ராகுல் திட்டவட்ட மறுப்பு- மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை இடைக்கால தலைவராக்க யோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை தற்போதைக்கு ஏற்கப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை இடைக்கால தலைவராக்கலாம் என்கிற யோசனையையும் ராகுல் காந்தி முன்வைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளார். காங்கிரஸை மறுசீரமைக்க கோரி 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியதன் தொடர்ச்சியாக இந்த முடிவை சோனியா எடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

Rahul Gandhi unwilling to take Cong. President charge?

இதனால்தான் சோனியா காந்தி, இடைக்கால பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவே தகவல்கள் பரவின. ஆனால் காங்கிரஸ் தரப்பு இதனை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி தமது முடிவை தெரிவிக்க உள்ளார்.

இதனை காங்கிரஸ் செயற்குழு ஏற்குமா? நிராகரிக்குமா? என்பது இன்று தெரியும். இதனிடையே சோனியா காந்தி பதவியில் தொடர விரும்பவில்லை எனில் ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராகுல் காந்தியோ, இப்போதைக்கு தாம் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

காங். இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை- ரந்தீப்சிங் சுர்ஜிவாலாகாங். இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை- ரந்தீப்சிங் சுர்ஜிவாலா

சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நடக்க போகும் அதிரடி!சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நடக்க போகும் அதிரடி!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கைகாங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை

காங். தலைவராக இந்திரா குடும்பம்தான்... 4 முதல்வர்கள், மாநில தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவுகாங். தலைவராக இந்திரா குடும்பம்தான்... 4 முதல்வர்கள், மாநில தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவு

Recommended Video

    Congress செயற்குழு கூட்டம்.. முடிவுக்கு வருமா குழப்பம்?

    அத்துடன் புதிய இடைக்கால தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை நியமிக்கலாம் என்கிற யோசனையையும் ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார். டெல்லியில் நடைபெறும் இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் (செயற்குழு) இதுதான் நடக்குமா? என்பது தெரிந்துவிடும்.

    English summary
    Rahul has expressed not willing to take the Party President Post, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X