டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படுதோல்விக்கு பிறகும் கட்சி பதவிகளில் நீடிக்கும் மூத்த தலைவர்கள்... கொந்தளிப்பில் ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் பல மூத்த தலைவர்கள் நீடிப்பதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம் ராகுல் காந்தி.

லோக்சபா தேர்தலில் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து படு தோல்வியைத் தழுவியது, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

வயநாடு தொகுதியில் வெற்றி
ராகுல் ராஜினாமா

அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

ராகுல் ராஜினாமா

ராகுல் ராஜினாமா

அதேநேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இருப்பினும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

பதவியில் மூத்த தலைவர்கள்

பதவியில் மூத்த தலைவர்கள்

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பயிற்சி கொடுத்தனர்.. தலையிலும், கண்ணுக்கு மேலும் சுட்டு தபோல்கரை கொன்றேன்! கொலையாளி பரபர வாக்குமூலம்பயிற்சி கொடுத்தனர்.. தலையிலும், கண்ணுக்கு மேலும் சுட்டு தபோல்கரை கொன்றேன்! கொலையாளி பரபர வாக்குமூலம்

கொந்தளிப்பில் ராகுல்

கொந்தளிப்பில் ராகுல்

இருப்பினும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகிறார். இதனிடையே தம்மை சந்தித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம், தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்கிறேன். ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளிலேயே இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராஜினாமா செய்த சீனியர்

ராஜினாமா செய்த சீனியர்

இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியிருக்கிறார் ராகுல். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸின் மனித உரிமைகள் பிரிவு தலைவருமான விவேக் தன்ஹா தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் வகையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Wayanad MP Rahul Gandhi upset over the Senior leaders who are not resigning from the party posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X