டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதித்து கொண்டிருப்பது தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Rahul Gandhi urges Make all COVID-19 related equipment GST-free

கொரோனா தொற்றை தடுக்க பயன்படுத்தப்படுகிற சானிடைசர், சோப்புகள், முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தவறானது. ஆகையால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜி.எஸ்.டி. வரியுடனான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கப்பட்ட பில்லையும் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் சில்மிஷம்- புதுவை எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் சில்மிஷம்- புதுவை எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்

அதில், சானிடைசர்கள், கை கழுவும் உபகரணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. முக கவசங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் #GSTFreeCorona என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி இதனை முன்னெடுக்கவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

English summary
Congress Senior leader Rahul Gandhi has urged that Make all COVID-19 related equipment GST-free.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X