• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லோக்சபாவில் சீரியசாக பேசும் தம்பித்துரை... கண்ணடித்து விளையாடும் ராகுல் காந்தி.. வைரலான வீடியோ

|
  Rahul Gandhi eye wink | லோக்சபாவில் கண்ணடித்த ராகுல் காந்தி : வைரல் வீடியோ

  டெல்லி:லோக்சபாவில் தீவிரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சக எம்பிக்களைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை என்று விமர்சித்துள்ளது.

  பப்பு என்று பாஜக மற்றும் ஆதரவு கட்சிகளால் அழைக்கப்பட்ட ராகுல் காந்தி, 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றியை பார்த்த பிறகு, தம்மை யாரும் அவ்வாறு கூற மாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். ஆனாலும், அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கி, பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாய்களுக்கு அவலாக மாறுகிறது ராகுல் காந்தியின் சில நடவடிக்கைகள்.

  கொஞ்சகாலம் முன்பு இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓய்வுக்காக சென்ற போது கடும் சர்ச்சையில் சிக்கினார். அவர் எங்கு சென்றார் என்று காங்கிரசுக்கே தெரியாது என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. பல காரணங்களை கூறி, காங்கிரஸ் கட்சி அப்போது சமாளித்தாலும், கடைசி வரை முழுமையான பதிலை அக்கட்சியினால் அளிக்க முடியவில்லை.

  வாக்கெடுப்பு - கட்டியணைப்பு

  வாக்கெடுப்பு - கட்டியணைப்பு

  நாடு திரும்பிய பின்னும், அது தொடர்பான தகவல்கள் உலா வந்தன. கொஞ்ச காலம் கழித்து, கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றத்தில் பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நாடாளுமன்ற அவையிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். பின் தன் இருக்கைக்கு திரும்பியதும் அருகில் இருந்த ஜோதிர்ராதித்ய சிந்தியாவை பார்த்து கண்ணடித்தார்.

  ராகுல் கண்ணடித்த சம்பவம்

  ராகுல் கண்ணடித்த சம்பவம்

  அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதேபோல் மற்றொரு செயலை ராகுல் காந்தி செய்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ரபேல் விவகாரம் தொடர்பான விவாதம் பெரும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.

  சீரியஸ் தம்பித்துரை

  சீரியஸ் தம்பித்துரை

  அ.தி.மு.க எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டு மேஜையை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர், ராகுல் காந்தி கண்ணடித்து சிரித்தார். இந்த காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

  வெளியானது வீடியோ

  ஆனால் தம்பித்துரை இருக்கும் திசை பக்கமே திரும்பியுள்ளார். அவரை பார்த்து தான் கண்ணடித்தார் என்பது குறித்து வீடியோவில் தெளிவாக பதிவாகவில்லை. ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தியின் கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

  சிகிச்சை தேவை என விமர்சனம்

  சிகிச்சை தேவை என விமர்சனம்

  அதில், ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததுக்கும் நாடாளுமன்றத்தில் கண்ணடித்ததுக்கும் தற்போது வரை மன்னிப்பு கேட்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  In Parliament, Congress President Rahul Gandhi winked again in the Lok Sabha during a heated debate on Rafale deal. The incident took place while M Thambi Durai, Deputy Speaker of Lower House, was speaking, standing in front of the Congress chief.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more