டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது.. ஆனால் அவரது இருப்பு நீங்கா இடம்பெறும்.. ராகுல் இரங்கல் கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    உடல்நல குறைவு காரணமாக அருண் ஜெட்லி காலமானார் | Arun Jaitley Passes Away | Oneindia Tamil

    டெல்லி: நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது என்ற போதிலும் அவரது இருப்பானது நினைவில் இருந்து நீங்காது என அவரது மனைவி சங்கீதாவுக்கு ராகுல்காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 9-ஆம் தேதி உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    எனினும் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இரங்கல் செய்தி

    இரங்கல் செய்தி

    அவருக்கு குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்

    ஜெட்லி மனைவி சங்கீதா

    ஜெட்லி மனைவி சங்கீதா

    இந்த நிலையில் ராகுல் காந்தி, ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உங்கள் கணவர் அருண் ஜெட்லி காலமானார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் வாழ்க்கை

    அரசியல் வாழ்க்கை

    கடந்த 40 ஆண்டுகளாக ஜெட்லியின் அரசியல் வாழ்க்கை ஈடு இணையற்றது. அரசியலில் அவர் ஆழமான தடங்களை பதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்க போவதில்லை. ஆனால் அவரது இருப்பு என்றும் நினைவில் கொள்வோம்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    ஜெட்லி இல்லாத இந்த கடினமான காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு அமைதியும் மனவலிமையும் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் ராகுல் கூறியிருக்கிறார்.

    English summary
    Rahul Gandhi writes letter to Arun Jaitley's wife Sangeeta that his voice will be no longer reverberate within the parliament, but we will remember his presence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X