டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?

Google Oneindia Tamil News

டெல்லி: அமேதி தொகுதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இந்திரா காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து வென்று வந்தனர். இம்முறை ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார்.

Rahul may resign as Cong. chief Post?

வயநாட்டில் அமோக வெற்றி கண்ட ராகுல், சொந்த தொகுதியான அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அவரது சகோதரி பிரியங்காவின் பிரசாரமும் அங்கு எடுபடவில்லை.

இதனால் ராகுல் காந்தியின் தலைமை மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஆளுமை இல்லாதவர் ராகுல் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா! 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. அப்போது தமது கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்படுகிறது,

English summary
Rahul Gandhi may resign as Congress president post at the Congress Working Committee meeting on Tomorrow in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X