டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி.. இணையத்தில் சூடான விவாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்த பிரதீப் சிங்கைவிட 420ஆவது இடம் பிடித்த ராகுல் மோடி என்ற பெயர் தான் இணையதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

2019-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 927 பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. பிரதீப் சிங் என்பவர் இந்த தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்), இந்திய வெளியுறவு சேவை (ஐ.எஃப்.எஸ்) மற்றும் இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுஷாந்த் வழக்கு- மகா. போலீசுடனான மோதலில் உச்சம்- கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட பீகார் ஐபிஎஸ் அதிகாரிசுஷாந்த் வழக்கு- மகா. போலீசுடனான மோதலில் உச்சம்- கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட பீகார் ஐபிஎஸ் அதிகாரி

ஒபிசி 251 பேர்

ஒபிசி 251 பேர்

மொத்த தகுதி வாய்ந்த தேர்வாளர்களில் 304 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர், 78 பேர் பொருளாதார பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்கள் (ஈ.டபிள்யூ.எஸ்) ஆவர். பின்தங்கிய வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் (ஓ.பி.சி) 251 என்றும், பட்டியல் சாதியினர் (எஸ்.சி), 129 பேர் என்றும், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் 67 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

15 நாட்களில் மதிப்பெண்

15 நாட்களில் மதிப்பெண்

ஒட்டுமொத்தமாக 182 தேர்வர்கள் ரிசர்வ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாகி உள்ளனர். அடுத்த மதிப்பெண் அளவு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிவில் சர்வீஸ் ரேங்க்

சிவில் சர்வீஸ் ரேங்க்

இந்த தேர்வில் வினோதமான ஒரு சம்பவமும் நடந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசியல் தலைவர்களான மோடி மற்றும் ராகுல் பெயரை கொண்ட ராகுல் மோடி என்பவர் 420-வது இடத்தை பிடித்துள்ளார்

எதிர்எதிர் அரசியல்

எதிர்எதிர் அரசியல்

இவரின் பெயர் இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. தேசிய அரசியலில் ராகுல்காந்தியும், நரேந்திர மோடியும் அரசியலில் எதிர் எதிராக உள்ளவர்கள் ஆவர் . இவர்களின் பெயர்களை கொண்ட நபர் சிவில் சர்வீசஸ் தேர்வில் 420 ஆவது இடம் பிடித்திருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆவர்.

English summary
Rahul Modi’s achievement even more interesting is that he ranked 420 on the merit list. The final UPSC 2019 result is available on the official UPSC website and a total of 829 candidates have been
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X