டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாதத்திற்கு 6,000 ரூபாயா?.. ராகுலின் அறிவிப்பு சாத்தியமற்றது… ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்... ராகுல் காந்தியின் அதிரடி திட்டம்- வீடியோ

    டெல்லி: ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என 'நிதி ஆயோக்' துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

    ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

    Rahuls announcement is impossible Says Niti aayog Vice - chairman Rajiv Kumar

    சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் 500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் திட்டத்தை விட, ராகுலின் இந்த வாக்குறுதி, அதிரடி அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும் எனவும் கேள்வி எழுப்பினார்.

    உங்க மேல தப்பு இருக்கு.. பதவி விலகிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. கமலின் அடேங்கப்பா திட்டம்! உங்க மேல தப்பு இருக்கு.. பதவி விலகிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. கமலின் அடேங்கப்பா திட்டம்!

    இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு, இத்திட்டத்தை செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 4% பின்னோக்கி சென்று விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நாட்டின் பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்காமல் ராகுல் காந்தி இது போன்ற வாக்குறுதிகளை அளித்து உள்ளார். 1971 ஆம் ஆண்டு 'வறுமையே அகற்றுவோம்' என இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார், ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை சாத்தியமற்றதாக உள்ளது. ராகுல் காந்தியின் அறிவிப்பும் அதுபோல் அமைந்துவிடும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    Niti aayog Vice - chairman Rajiv Kumar said that Rahul's announcement is impossible:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X