டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியும், அமித்ஷாவும் இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டனர் -ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், நாட்டை பிரித்து வெறுப்புணர்வுக்கு பின்னால் அவர்கள் ஒளிந்து கொள்வதாக புகார் கூறியிருக்கிறார்.

இளைஞர்களின் கோபத்தை பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் எதிர்கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

எதிர்காலம்

எதிர்காலம்

இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''அன்பான இளைஞர்களே, மோடியும், அமித்ஷாவும் உங்கள் எதிர்காலத்தை சிதைத்துவிட்டார்கள். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு ஆகிய விவகாரங்களில் உங்களின் கோபத்தை அவர்கள் இருவராலும் எதிர்கொள்ள முடியவில்லை''.

வெறுப்புணர்வு

வெறுப்புணர்வு

''இளைஞர்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாததால், நாட்டை பிரித்து வெறுப்புணர்வுக்கு பின்னால் அவர்கள் இருவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு சக இந்தியரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களை நம்மால் வீழ்த்த முடியும்.''

வரவேற்பு

வரவேற்பு

மேற்கண்ட இந்த வாசகத்தை ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவேற்று அதனை லைக் கொடுத்துள்ளனர். இளைஞர்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் போராட்டத்திற்கு அழைத்து அவர்களை தூண்டிவிடுவதாக பாஜக குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ராகுல் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

பாஜக தரப்பு

பாஜக தரப்பு

பிரதமர் மோடி குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் ராகுல் நேரடியாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
rahul says, Modi and Amit Shah have ruined the future of youth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X