டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த முறை 2 கேள்விகளுக்காவது பதிலளிக்க மோடியை அனுமதியுங்கள்... ராகுல் காந்தி கிண்டல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி பேசிய அதே நேரத்தில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் 7 ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை ஒட்டி, இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார்.

    Rahul Tweet: Next time Mr Shah may even allow you to answer a couple of questions. Well done

    இந்த சந்திப்பில், அனைத்து கேள்விகளுக்கும் வரிசையாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்து வந்தார். ஆனால் பிரதமர் மோடி எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. மிக சாதாரண கேள்விக்கு கூட மோடி பதில் அளிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விக்கும் கூட மோடி பதில் அளிக்காமல் இருந்தார். இந்த சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித் ஷா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்.

    என்னாது மோடி 88லேயே மெயில் அனுப்பினாரா.. இன்டர்நெட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிரிப்பு! என்னாது மோடி 88லேயே மெயில் அனுப்பினாரா.. இன்டர்நெட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிரிப்பு!

    இந்தநிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ட்வீட்டரில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி, அதில், மோடி ஜி வாழ்த்துக்கள். சிறந்த செய்தியாளர்கள் சந்திப்பு என்றும், அரை யுத்தத்தை காட்டுகிறது. அடுத்த முறை திரு. ஷா அவர்கள், உங்களை ஜோடி கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்கட்டும். நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Congratulations Modi Ji. Excellent Press Conference! Showing up is half the battle. Next time Mr Shah may even allow you to answer a couple of questions. Well done!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X