டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீப் சத்தம் வந்ததும்.. 3 மாநில முதல்வரை ஆப் மூலம் தேர்ந்தெடுக்கும் ராகுல் "வாவ்" காந்தி!

மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆண்டிராய்ட் ஆப் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தி விஸ்வரூபம் சாத்தியமானது எப்படி?- வீடியோ

    டெல்லி: மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆண்டிராய்ட் ஆப் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் யார் என்று இன்று தீர்மானம் செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.

    மிகுந்த ஆலோசனைக்கு பின்பும், விவாதத்திற்கு பின்பும் இன்று இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்று முக்கிய பங்கு வகித்துள்ளது.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் குழம்பி வருகிறது. சட்டீஸ்கரில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்வர் போட்டியில் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியில் உள்ளனர். ராஜஸ்தானில் சச்சின் பைலட், அசோக் கெலாட் போட்டியில் இருக்கிறார்கள்.

    மீட்டிங் வைத்து

    மீட்டிங் வைத்து

    இதற்காக மூன்று மாநிலங்களிலும் நேற்று மீட்டிங் நடந்தது. எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டி கணக்கு எடுத்தது. இந்த அறிக்கை நேற்று இரவோடு இரவாக ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டது. இது எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ள அறிக்கை ஆகும்.

    நல்ல விருப்பம்

    நல்ல விருப்பம்

    ஆனால் ராகுல் காந்தி மேலே இருக்கும் நபர்களின் விருப்பம் மட்டுமில்லாமல் எல்லோரின் விருப்பமும் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதற்காக இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தொண்டர்களை பயன்படுத்தி ''சக்தி'' என்ற ஆண்ட்ராய்ட் ஆப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

    7.5 லட்சம் பேர்

    7.5 லட்சம் பேர்

    இந்த ஆப்பை மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 7.5 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லோருடனும் நேரடியாக இந்த ஆப் மூலம் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். இதற்காக இந்த ஆப்பில் நேற்று முதல் நாளே சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    எப்படி

    எப்படி

    அதன்படி இதில் ராகுல் காந்தி அனுப்பிய ஆடியோ மெசேஜ் ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால், முதலில் ராகுல் காந்தி தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி சொல்லி உள்ளார். அதன்பின் ''இப்போது ஒரு பீப் சத்தம் வரும், அதன்பின் உங்கள் மாநிலத்தில் யார் முதல்வராக வர வேண்டும் என்று கூறுங்கள். ஒரு நபரை மட்டும் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது வெளியே தெரிவிக்கப்படாது. ரகசியம் காக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

    சூப்பர் ஐடியா

    சூப்பர் ஐடியா

    6 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் பதில் அளித்து இருக்கிறார்கள். இதை முதல்வர் தேர்வின் போது முக்கியமாக கணக்கில் எடுத்து கொள்ள போவதாக ராகுல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் நபர் முதல்வர் ஆவார் என்று ராகுல் நம்புகிறார். அட, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் எப்படி காக்கப்படுகிறது என்று எல்லோரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

    English summary
    Congress chief Rahul Gandhi uses an Android app to choose Congress CM in Three states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X