டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் முக்கியமான நெடுஞ்சாலைகளை ஒட்டி ரயில் பாதைகளை அமைக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் முக்கியமான நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகளை ஒட்டி ரயில் பாதைகளை அமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Rail lines planned along key highway

அதன்படி டெல்லி- அமிருதசரஸ்- கத்ரா மற்றும் சென்னை- பெங்களூர் ஆகிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகளை அமைக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஆலோசனை கூட்டங்களை நடத்தின.

அதில் இதுபோன்ற ரயில் பாதைகளை எப்படி அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேற்கண்ட நெடுஞ்சாலைகளுடன் மேலும் சில முக்கிய சாலைகளை ஒட்டி ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து கூறும். பசுமை வழிச்சாலைகளில் ரயில் பாதைகள் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யவுள்ளோம்.

பசுமை வழிச்சாலைகளில் நிலங்களை கையகப்படுத்தினால் அரசுக்கு பணம் மிச்சமாகும். முதலில் டெல்லி- அமிருதசரஸ்- கத்ரா இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ 25 ஆயிரம் கோடியில் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

இதன் மூலம் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் செல்லும் நேரம் மிச்சமாகும். சுல்தான்பூர் லோதி, கோயிந்த்வால் சாஹிப், காதூர் சாஹிப் ஆகிய மதவழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் மிகவும் குறுகிய வழியாக இது அமையும்.

இது மட்டுமல்லாமல் அகமதாபாத்- தோலேரா, கான்பூர்- லக்னோ, அமிருதசரபஸ்- பத்திந்தா- ஜாம்நகர், ஹைதராபாத்- ராய்ப்பூர், நாக்பூர்- விஜயவாடா ஆகிய நெடுஞ்சாலைகளை ஒட்டியும் ரயில் சாலை அமைக்கப்படும். சாலை அமைப்பும், ரயில் தண்டவாள அமைப்பும் வேறுபட்டவை என்பதால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் சில பிரச்சினைகள் எழலாம். என்றனர்.

English summary
Rail lines planned along key highway. It is to be built in the country in a bid to boost connectivity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X