டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசத்திற்கே வெட்கக்கேடானது.. நமக்கு புல்லட் ரயில் முக்கியமில்லை.. லோக்சபாவில் கொதித்த கனிமொழி

Google Oneindia Tamil News

Recommended Video

    Kanimozhi Lok Sabha speech | புல்லட் ரயில் முக்கியமில்லை: லோக்சபாவில் கொதித்த கனிமொழி- வீடியோ

    டெல்லி: ரயில்வேயில் இன்னும் மனிதக் கழிவுகளை மனிதனே கைகளால் அள்ளும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நமக்கு புல்லட் ரயில்கள் முக்கியமில்லை என திமுக எம்பி கனிமொழி லோக்சபாவில் ஆவேசமாக தெரிவித்தார்

    மத்திய அரசு நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் புல்லட் ரயில்கள் விடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் அகமதாபாத் - மும்பை இடையே நாட்டின் முதல் புல்லட்ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    Railway still employs manual scavengers so not important bullet trains, says Kanimozhi mp

    மும்பை- அகமதாபாத் இடையே மொத்த தூரம் 508 கி.மீ. இந்தத் தூரத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்துவிடும். 800-1000 பயணிகளை சுமந்து செல்லும் இந்த ரயில், இன்னும் சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரப்போகிறது.

    இந்நிலையில் இன்றைய ரயில்வேயின் நிலை குறித்தும் புல்லட் ரயில்கள் குறித்தும் குறிப்பிட்டு லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி இன்று ஆவேசமாக கேள்வி ஒன்றை எழுப்பி பேசினார்.

    தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை தமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை

    கனிமொழி இது தொடர்பாக பேசுகையில், "ரயில்வேயில் இன்னும் பணியாளர்களை கொண்டு மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு புல்லட் ரயில்கள் கிடைத்தாலும் அது முக்கியமில்லை. ரயில்வே மனித மலத்தை அள்ளும் வேலையை ஊழியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்த பணியாளர்களை நியமித்து மனித கழிவுகளை அள்ளி வருகிறது. இந்த நிகழ்வு இன்னும் தொடர்வது தேசத்திற்கு வெட்கக்கேடானது" இவ்வாறு கூறினார்.

    English summary
    Kanimozhi, DMK in LS: It's not important if we've bullet trains,what we've to be ashamed of is that Railway still employs manual scavengers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X