டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறப்பு ரயில்களை தவிர்த்து.. ஆகஸ்ட் 12 வரை அனைத்து வகை ரயில்களும் ரத்து.. வெளியான அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அட்டவணைப்படி இயங்கக்கூடிய அனைத்து வகை ரயில் சேவையையும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாது, நகரங்களில் இயங்கக்கூடிய புறநகர் ரயில் சேவையும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Railways cancels passenger trains till August 12, how to get refund

அதேநேரம் மே 12ம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ராஜதானி ரயில்கள் தொடர்ந்து இயங்கும். ஜூன் மாதம் 1ம் தேதி முதல், 200 சிறப்பு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை ரயில்வே துவங்கியுள்ளது. இந்த ரயில்களும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை தொடர்ந்து இயங்கும் என்று ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல், ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலான வரையிலான இடைப்பட்ட காலத்தில் பயணிகள் ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெற முடியும். முழு பணத்தையும் எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது தொடர்பான வழிகாட்டும் நடைமுறைகள் ரயில் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.

என்னாது கொரோனாவுக்கு மருந்தா?ராம்தேவ் அண்ட் கோவுக்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகள் கடும் எச்சரிக்கைஎன்னாது கொரோனாவுக்கு மருந்தா?ராம்தேவ் அண்ட் கோவுக்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகள் கடும் எச்சரிக்கை

ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ரயில் பயணம் தேதியிலிருந்து 6 மாத காலத்திற்குள் பணத்தை திரும்ப கேட்டு விண்ணப்பம் செய்ய முடியும். ரயில்வே நிலையம் சென்று டிக்கெட் டெபாசிட் ரசீது நிரப்புதல் அவசியம்.

அடுத்த 60 நாட்களுக்குள் இந்த விண்ணப்பத்தை தலைமை வணிக மேலாளர் அல்லது தலைமை உரிமைகோரல் (claim) அலுவலர் ஆகியோரிடம் கொடுத்து பணத்தை பெற முடியும்.

ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோருக்கு, தானியங்கி முறையில் உங்களது வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும். 139 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Railways today has cancelled all the passenger train services till August 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X