டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி பெரிய ரயில் நிலையங்களில்.. ரயில் ஏற போறீங்களா.. அதிர வைக்கும் ரயில்வேயின் திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிஸியான ரயில் நிலையங்களில் ரயில்களில் ஏற விரும்பும் பயணிகளிடமிருந்து இந்திய ரயில்வே விரைவில் "டோக்கன் பயனர் கட்டணம்" வசூலிக்கத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக மொத்த கட்டணத்தில் ஓரளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. '

ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்கும், நிலைய உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் பயனர் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. விமான பயணத்தில் ஏற்கவே செய்யப்படும் இந்த நடைமுறை ரயில் நிலையங்களுக்கும் வர போகிறதாம்.

இந்திய ரயில்வே விரைவில் "டோக்கன் பயனர் கட்டணம்" என்ற பெயரில் மிகவும் பிஸியான ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற உள்ளவர்களுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி... சென்னையில் 12 பேர் பலி... ஐஎம்ஏ!!தமிழகத்தில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி... சென்னையில் 12 பேர் பலி... ஐஎம்ஏ!!

கட்டணம் வசூல்

கட்டணம் வசூல்

இதுபற்றி ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான வி கே யாதவ் இது பற்றி கூறுகையில், "நாங்கள் இதற்கான பயனர் கட்டணத்தை மிகக் குறைந்த தொகையை வசூலிக்க போகிறோம்.. தற்போதுள்ள உள்ள ரயில் நிலையங்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்படாத ரயில் நிலையங்களுக்கான பயனர் கட்டணத்திற்கான அறிவிப்பை நாங்கள் வெளியிட உள்ளோம்.

ரயில் நிலையங்கள் மேம்பாடு

ரயில் நிலையங்கள் மேம்பாடு

ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் முடிந்ததும் பயனர் கட்டணம் சலுகைகளுக்குச் செல்லும். அதுவரை சேகரிக்கப்படும் பயனர் கட்டணம் (user charge) நிலையங்கள் முழுவதும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க ரயில்வேயால் பயன்படுத்தப்படும்.

எத்தனை ரயில் நிலையங்களில்

எத்தனை ரயில் நிலையங்களில்

கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும், இந்த கட்டணம் பயணிகளை பாதிக்காது.. உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்துவதால் இது முக்கியமானது. அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் சுமார் 7,000 நிலையங்கள் உள்ளன, இதில் பயணிகளுக்கு டோக்கன் பயனர் கட்டணம் 10-15% நிலையங்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படும் . அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும். அந்த கணக்கீட்டின்படி, 700 முதல் 1,000 ரயில் நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்" என்றார்.

சலுகை மதிப்பு அதிகம்

சலுகை மதிப்பு அதிகம்

முன்னதாக, ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரிய ரயில் நிலையங்களில் மட்டுமே பயனர் கட்டணம் வசூலிக்கப்படும். அப்பபடிப்பட்ட ரயில் நிலையங்களில் சலுகைகளின் மதிப்பு குறைந்தபட்ச பயனர் கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். இது ஒரு கட்டமாக செய்யப்படும். 10-15% நிலையங்களை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்றார்.

கட்டணம் வசூலிப்பது உறுதி

கட்டணம் வசூலிப்பது உறுதி

இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் லோக்சபாவில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில், "சிறந்த பாதுகாப்பு, பயணிகள் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்கும் நவீனமயமாக்குவதற்கும் ஒரு குழு செயலாளர்கள் (GoS) அமைக்கப்பட்டனர். நிலையங்களின் மறுவடிவமைப்புக்கு பெயரளவு பயனர் கட்டணத்தை வசூலிக்க GoS இன்டரெலியா பரிந்துரைத்தது, இது தற்போது பரிசீலனையில் உள்ளது" என்றார்.

English summary
The Indian Railways will soon start levying a “token user fee” from passengers taking trains from busy stations, which will result in marginal increase in the total fare
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X