டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்டனத்திற்கு உரியது.. பாக்.கிற்கு ஆதரவாக சீனா செயல்படுவது தவறு.. இந்தியா கடும் எச்சரிக்கை!

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா பேசுவது கண்டனத்திற்கு உரியது, சீனா இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறையின் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் பிரச்சனை: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

    டெல்லி: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா பேசுவது கண்டனத்திற்கு உரியது, சீனா இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறையின் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    இந்த காஷ்மீர் பிரச்சனையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்புவதற்கு சீனா மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று கொண்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் சீனா ஓராண்டு நாடுகளும் இதில் மோசமாக தோல்வி அடைகிறது.

    என்ன தோல்வி

    என்ன தோல்வி

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்த பிரச்சனையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் சார்பாக சீனா எழுப்பியது. அதேபோல் கடந்த வருடம் டிசம்பரில் சீனா இதே பிரச்னையை எழுப்பியது. ஆனால் இரண்டு முறையும் பாகிஸ்தான், சீனா இரண்டும் இதில் மொத்தமாக தோல்வி அடைந்தது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவிற்கு எதிராக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    நிலை என்ன

    நிலை என்ன

    இந்த நிலையில் நேற்று மீண்டும் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா இதே பிரச்சனையை எழுப்பியது. பாகிஸ்தானின் அழுத்தத்தின் பெயரில் சீனா இதை செய்தது. காஷ்மீர் குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் தனிப்பட்ட விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இதை ஏற்கவில்லை. இது இரண்டு நாட்டு பிரச்சனை, அவர்கள்தான் இதை பேசி தீர்க்க வேண்டும் என்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூறிவிட்டது. இது பாகிஸ்தான், சீனாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    பேட்டி

    பேட்டி

    இது குறித்து தற்போது இந்திய வெளியுறவுத்துறையின் ரவீஷ் குமார் அளித்த பேட்டியில், சீனா மூலம் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப நினைப்பது பாகிஸ்தானின் தவறு ஆகும். இப்போது உலக அளவில் அவர்களுக்குத்தான் அவமானம். இது போன்ற செயல்களை இனி பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.

    மோசம்

    மோசம்

    இது போன்ற செயல்களை செய்யாமல், சீனாவும் தவிர்க்க வேண்டும். சீனா பாகிஸ்தான் பேச்சை கேட்டு செயல்படுவது கண்டனத்திற்கு உரியது. உலக நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு சீனா இனி பாடம் படிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து இடம் தருவது தவறு என்று மிகவும் கடுமையாக ரவீஷ் குமார் பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Raising the Kashmir issue in UNSC is condemnable: India Warns China for favoring Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X