டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி... ராஜினாமா செய்ய சச்சின் அழுத்தம்...நோ சொல்லும் ஆதரவாளர்கள்!!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் தனக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு துணை முதல்வர் சச்சின் பைலட் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் ராஜினாமா செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதாலும், சச்சின் பைலட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வந்தது. இது தற்போது வெளிச்சத்துக்கு வந்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி உடையும் நிலைக்கு சென்றுள்ளது. ஒன்று சச்சின் பைலட் பாஜகவுடன் இணைய வேண்டும் அல்லது கட்சியில் இருந்து வெளியேறி தனிக் கட்சி துவங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Rajasthan Deputy CM Sachin Pilot putting pressure to resign his loyalists

காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சிக்கலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் ஆர்வம் காட்டி வருகிறது. சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நீங்கலாக தங்களுக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அசோக் கெலாட் நேற்று தெரிவித்துள்ளார். இத்துடன் காங்கிரஸ் சட்டமன்ற கமிட்டி உறுப்பினர்களும் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தொடர்ந்து சச்சின் பைலட்டிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பேசியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று, பாஜகவுடன் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.

சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!

இதற்கிடையே இதுவரை காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பாரதிய பழங்குடியினர் கட்சி நடுநிலை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அதாவது அசோக் கெலாட் அல்லது சச்சின் இருவருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால், இந்தக் கட்சிக்கு இருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க உறுதி அளித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று நடந்த எம்..எல்.ஏ.கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இன்று மீண்டும் ஜெய்ப்பூருக்கு வெளியே அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு இருக்கும் ஓட்டலில் இரண்டாவது கூட்டம் நடக்கிறது. இதிலும் கலந்து கொள்ள சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாகவும், இனி தாமதிக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திலும் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை என்றால், அதிரடி முடிவுகள் இருக்கும் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே இதுவரை காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பாரதிய பழங்குடியினர் கட்சி நடுநிலை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அதாவது அசோக் கெலாட் அல்லது சச்சின் இருவருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால், இந்தக் கட்சிக்கு இருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு கொடுகக் உறுதி அளித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்படும். வெளியேறியவர்கள் திரும்பவும் கட்சிக்குள் வரலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்து இருந்தார். சச்சின் பைலட் தொடர்ந்து அடம்பிடித்தால், மேலும் தாமதிக்காமல் முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையும் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Rajasthan Deputy CM Sachin Pilot putting pressure to resign his loyalists
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X