டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜஸ்தான், தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்கள்.. வாக்கு பதிவு நிறைவடைந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல்- வீடியோ

    டெல்லி: ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காலை தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்த ஆண்டு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    Rajasthan and Telangana Assembly election 2018 begins today

    இதையடுத்து 3 மாநிலங்களுக்கு சென்ற வாரமே தேர்தல் நடந்து விட்டது. மீதமுள்ள ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் துவங்கின.

    தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் மாநில கட்சிகளும் போட்டி போடுகின்றன. வாக்குப் பதிவையொட்டி இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தது.

    இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். முக்கியமான ராஜஸ்தானில் மக்கள் அதிக அளவில் ஆர்வமாக வாக்களித்தனர்.

    ராஜஸ்தானில் மூன்று மணி வரை 59.43 சதவிகிதம் பேரும், தெலுங்கானாவில் 3 மணி வரை 56.17 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

    தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 5 மாநிலங்களுக்கும் வரும் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    English summary
    Rajasthan and Telangana assembly election polling begins today for 199 seats and 119 seats respectively.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X