டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தும் விசாரணைக்கும் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழருக்கும் எந்த தொடர்புமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தமக்கான தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.

Rajiv Case: Multi Disciplinary Monitoring Agency not Related to Seven Tamils

சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தி வரும் விசாரணை அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது:

ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்

பல்நோக்கு கண்காணிப்பு குழுவானது 20 ஆண்டுகளாக ராஜீவ் கொலையின் பின்னால் இருக்கும் ஒரு பெரிய சதித் திட்டம் குறித்து விசாரித்து வருகிறது. இன்னனும் வெளிநாடுகளில் இருந்து பதில் கடிதங்களை இந்த குழு பெற்று வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்? ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்?

இந்த சதி விசாரணை என்பதே வேறு யாருக்கு எல்லாம் இந்த படுகொலையில் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பானதுதான். ஏற்கனவே இந்த வழக்கில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் தொடர்பானது அல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறது.

ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஏற்கனவே பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணையில் புதிய தகவல் எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதனால், பேரறிவாளன் வாங்கி கொடுத்த பேட்டரியில்தான் பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க புதிய ஆதாரம் இல்லை எனவும் இந்த குழு உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme court today said that the Multi Disciplinary Monitoring Agency Probe in Rajiv Assassination Case not Related to Seven Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X