டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎன்எஸ் விராட் போர் கப்பலில் குடும்பத்தோடு சுற்றுலா சென்றவர் ராஜிவ் காந்தி.. மோடி பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது குடும்பத்தார், 'ஐஎன்எஸ் விராட்' எனப்படும், இந்திய கடற்படை விமானம் தாங்கி போர்க் கப்பலை, விடுமுறையை கழிக்க பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல் குற்றவாளியாகத்தான் மறைந்தார் என்று, ஏற்கனவே மோடி குற்றம் சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Rajiv Gandhi used warship INS Virat to go on holiday: PM Modi

இந்த நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் புதன்கிழமை (இன்று) இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மீண்டும் ராஜீவ் காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நீங்கள் எப்போதாவது ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை சுற்றுலாவுக்கு சிலர் பயன்படுத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி பதவி வகித்தபோது இது நடந்தது. கடலோர பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல், விடுமுறையை கழிப்பதற்காக 10 நாட்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது, ராஜீவ் காந்தி தனது மனைவிவழி உறவினர்களையும் அந்த கப்பலில் அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவருமே இத்தாலி நாட்டு குடிமக்கள். இந்தியப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட், உட்பகுதிக்குள் வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட வரலாறு நடந்தது. இது தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வது இல்லையா?

Rajiv Gandhi used warship INS Virat to go on holiday: PM Modi

இந்திய குடிமக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாகத்தான் அவர்கள், மதித்தார்கள். கால் டாக்சி போல இந்திய போர்க் கப்பலை பயன்படுத்தினர். இவ்வாறு நரேந்திர மோடி குற்றம்சாட்டி பேசினார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்

1987ஆம் ஆண்டு லட்சத் தீவு பகுதிக்கு, ராகுல் காந்தி தனது குடும்பத்தோடு சுற்றுலாவுக்கு சென்றார். இதற்காக, போர்க் கப்பலை அவர் பயன்படுத்தியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பாகிஸ்தானில் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தை மோடி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதாக, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நாட்டின் ராணுவம் யாருடைய சொத்தும் கிடையாது என்று ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடியை விமர்சித்து, பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ் காந்தி காலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை மோடி சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

English summary
Continuing his attack on former prime minister Rajiv Gandhi, Narendra Modi said that the Rajiv Gandhi used warship INS Virat as 'private taxi' for holidaying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X