டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம்!

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமாரை ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமாரை ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய நிதித்துறைதான் பொதுவாக ஒரு நாட்டின் மொத்த பட்ஜெட், வரவு, செலவு உள்ளிட்ட அனைத்து பொருளாதாரம் தொடர்பான விஷயங்களை கையாளும். முக்கியமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் இந்த துறையின் தேவை அதிகம் ஆகும்.

Rajiv Kumar, Secretary has been appointed as the Finance Secretary

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் மத்திய நிதித்துறையின் செயல்பாடுகள் அதிக கவனம் பெறுகிறது. இதையடுத்து தற்போது மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமாரை ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு முன் மத்திய நிதித்துறை செயலாளராக சுபாஷ் சந்திரா கார்க் இருந்தார். இவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சுபாஷ் சந்திரா கார்க் விருப்ப ஓய்வு கேட்டுள்ளார்.

இதனால் அவர் ஓய்வு அடையும் முன், மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் நிதி சேவை செயலாளராக ராஜீவ் குமார் இருந்தார். தற்போது நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராஜீவ் குமார் 1984ம் ஆண்டு பேட்ச் ஜார்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
IAS officer Rajiv Kumar, Secretary has been appointed as the Finance Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X