டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தி ஊழல் நம்பர் ஒன் தான்.. பிரதமரின் கருத்துக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

Google Oneindia Tamil News

டெல்லி: மறைந்த ராஜீவ் காந்தி ஊழல் செய்ததில் முதன்மையானவர் என்ற பிரதமரின் கருத்து சரி தான் என, சிரோமணி அகாலி தளம் கட்சி கருத்து தெரிவித்துள்ளது

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய மோடி, ராஜீவ் காந்தி தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தாகவும், நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக இருந்ததாகவும் குற்றம் சுமத்தினார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

Rajiv was the only Prime Minister in the world doing mob attack..Manjinder Singh

இந்நிலையில் ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு, சிரோமணி அகாலி தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வெளியிட்டுள்ள கருத்தில், ஊழலில் முதன்மையானவர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி சரியாகவே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மஞ்சிந்தர் சிங் நாட்டின் மிகப்பெரிய கும்பல் தாக்குதல் குழுவின் தலைவராக ராஜீவ் காந்தி விளங்கியதாக குற்றம் சுமத்தியுள்ளாார். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, கும்பல் தாக்குதல் நடத்திய உலகின் ஒரே பிரதமர் ராஜீவ் காந்தி தான் என குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு! தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் தெரிவிக்கவில்லை என வினவிய அவர், திட்டமிட்டு சீக்கியர்களை கொன்று குவித்ததே காங்கிரஸ் தான் என்றார்.

சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ராஜீவ் காந்தி ஊக்குவித்ததோடு, அதில் ஈடுபட்டவர்களைப் பாதுகாத்தார். படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு பரிசும் வழங்கினார்.

அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஏன் ஆறுதல் கூறவில்லை என்பதை, ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என மஞ்சிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

English summary
shiromani akali dal party commented that the Prime Minister's view that the late Rajiv Gandhi was the chief of corruption is correct
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X