டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி!.. ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நம்பர் 2 யார் என்கிற அதிகாரப் போட்டி மீண்டும் வெடித்தது. இதையடுத்து அமைச்சரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு 6-ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    முந்தைய மோடி அரசில் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி இடையே நம்பர் 2 யார் என்கிற பஞ்சாயத்து 5 ஆண்டுகாலமும் நீடித்தது. அருண்ஜேட்லிக்கு எதிராக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் பகிரங்கமாகவே குரல் எழுப்பினர்.

    இதுபோன்ற காரணங்களாலும் உடல்நிலையை கருத்தில் கொண்டும் இம்முறை மோடி தலைமையிலான அரசில் தமக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டார் அருண்ஜேட்லி. இத்தனைக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று அருண்ஜேட்லியை சமாதானப்படுத்தியும் அவர் பிடி கொடுக்கவில்லை.

    பிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்? பிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்?

    ராஜ்நாத்சிங் நம்பர் 2

    ராஜ்நாத்சிங் நம்பர் 2

    இந்நிலையில் மோடி அரசு 58 அமைச்சர்களுடன் பதவியேற்றது. இம்முறை ராஜ்நாத்சிங்குக்கு பாதுகாப்பு துறை கொடுக்கப்பட்டது. பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது. ராஜ்நாத்சிங்தான் அமைச்சரவையில் இம்முறை நம்பர் 2- என கூறப்பட்டது.

    அமைச்சரவை குழுக்கள் மாற்றம்

    அமைச்சரவை குழுக்கள் மாற்றம்

    இதனிடையே பிரதமர் மோடி, முந்தைய 8 அமைச்சரவை குழுக்களை மாற்றி அமைத்தார். இதில் பிரதமர் மோடி 6. அமித்ஷா 8 அமைச்சரவை குழுக்களில் இடம்பெற்றிருந்தனர்,

    ராஜ்நாத்சிங்குக்கு 2 இடம்தான்

    ராஜ்நாத்சிங்குக்கு 2 இடம்தான்

    அதே நேரத்தில் ராஜ்நாத்சிங்குக்கு 2 அமைச்சரவை குழுக்களில்தான் இடம் ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மோடி அரசில் அறிவிக்கப்படாத நம்பர் 2-வாக அமித்ஷா இருப்பதை இது வெளிப்படுத்தியது.

    கொந்தளித்த ராஜ்நாத்சிங்

    கொந்தளித்த ராஜ்நாத்சிங்

    இது தம்மை அவமதிக்கும் செயல் என கொதித்துப் போனார் ராஜ்நாத்சிங். ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்களை அமித்ஷா அண்ட் கோ ஓரம்கட்டி ஆலோசனைக் குழுவில் அமர வைத்துவிட்டது. இந்த வரிசையில் தம்மையும் இணைத்துவிட முயற்சிக்கிறார்களே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்நாத்சிங். இதையடுத்து வேறுவழியே இல்லாமல் அமைச்சரவை குழுக்களை மீண்டும் மோடி மாற்றி அமைத்தார். தற்போது ராஜ்நாத்சிங் பிரதமரைப் போல 6 அமைச்சரவை குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார். அமித்ஷாவின் இந்த ஆடுபுலி ஆட்டம், மோடி அரசின் மோதலை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Centre revamped the Cabinet Committees to include Defence Minister Rajnath Singh in four more panels.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X