டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை!

அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வந்தது.

Rajnath Singh talks Kashmir issue with US Defence Secretary in Phone Call

தற்போது இந்த விரிசல் மேலும் அதிகம் ஆகியுள்ளது. 70 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் கடந்த இரண்டு வாரம் முன் அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு எதிராக பாகிஸ்தான் ஏற்கனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்திலும் புகார் கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் எஸ்பருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் பிராந்திய அமைதிக்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். இந்தியா அமெரிக்க இடையிலான உறவு எப்போதும் போல இருக்கும். காஷ்மீரில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்பது சந்தோசம்.

காஷ்மீர் சிறப்புப்பிரிவு நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்காவும் இதை ஆதரிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Defense Minister Rajnath Singh talks Kashmir issue with US Defense Secretary in Phone Call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X