Just In
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு.. 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங்
டெல்லி: ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்க உள்ளார்.

இம்மாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார் ராஜ்நாத்சிங். இதற்காக புதன்கிழமையன்று மாஸ்கோ புறப்படுகிறார் ராஜ்நாத்சிங்.
லடாக்: பாங்கோங் த்சோ ஏரி பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா - வெளியுறவு அமைச்சகம்
லடாக் எல்லையில் சீனா ஊடுருவல் முயற்சிகளை இந்தியா இடைவிடாது முறியடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜ்நாத்சிங்கின் மாஸ்கோ பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.