டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று 3 தொழிலாளர் மசோதாக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிகாரபூர்வ மொழி மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ராஜ்ய சபா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எட்டு நாட்களுக்கு கூட்டத் தொடர் இருக்கும்போதே அவை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று அவையில் எதிக்கட்சிகள் இல்லாமலே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரபூர்வ மொழிகளாக காஷ்மீரி, டோங்கிரி, இந்தி, உருது, ஆங்கிலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜாதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா

ஆறு அறிமுகம்

ஆறு அறிமுகம்

இன்று ராஜ்ய சபா துவங்கும்போது பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ''அவை 18 நாட்கள் நடக்க வேண்டும் ஆனால், பத்து நாட்களுக்கு மட்டுமே நடத்துள்ளது. இந்தக் கூட்டத் தொடர் மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்தது. 25 மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆறு மசோதாக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

வருத்தம்

வருத்தம்

அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுப்பினர்கள் எதிர்காலத்திலாவது உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இக்கட்டான சூழலில் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இன்றைய ராஜ்ய சபா கூட்டத்திலும் எதிர்க்கட்சி உறப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களின் மீதான நடவடிக்கை மற்றும் வேளாண் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.

குலாம் நபி ஆசாத்

கையில், ''சேவ் பார்மர்ஸ்'' ''சேவ் டெமாகிரசி'' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் முன்னின்று நடத்திச் சென்றார். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தெரிக் ஓ பிரையன், சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி ஜெயா பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குலாம் நபியின் அலுவகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

English summary
Rajya Sabha adjourned sine die amid Opposition leaders march in parliament premises
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X