டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடக பிரச்சனை.. முடங்கியது ராஜ்யசபா .. பாஜகவை குற்றம்சாட்டி காங். எம்பிக்கள் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு ஆளும் பாஜகவை குற்றச்சாட்டி ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபா நாள் முழுவதம ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும் பரமேஸ்வர் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில் குமாரசாமி அரசை கவிழ்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எம்எல்ஏக்ளும், 3 மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்ளும் சபாநாயகரின் செயலாளிடம் கடிதம் கொடுத்தனர்.

rajya sabha adjourned till tomorrow over karnataka issue after congress mps passionate slogan

இதேபோல் சுயேட்சைகள் இரண்டு பேரும் தங்கள் ஆதரவை விலக்கி கொண்டு பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 103 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.

எம்எல்ஏக்கள் 13 பேரும் தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் 13 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் குமாரசாமி ஆட்சி தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் அதிர்ச்சியில் உள்ள காங்கிரஸ் எம்பிக்கள் ராஜ்யசபாவில், இன்று காலை கர்நாடக பிரச்னையை எழுப்பியதுடன் பாஜகவை கண்டித்து ஆவேச முழக்கங்கள் எழுப்பினார். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்யசாபா பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
rajya sabha adjourned till tomorrow over karnataka issue, congress mps accuses bjp create problem in karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X