டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 எதிர்க்கட்சிகள் திடீர் ஆதரவு.. ஜம்மு- காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க ராஜ்யசபா ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு - காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ராஜ்யசாபாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஜூலை 3 முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகப்போகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, மொத்தமுள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களும், காங்கிரஸ் 12 இடங்களும், பா.ஜ.க 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தன.

Rajya Sabha approves statutory resolution to extend Presidents rule in J&K

இதில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இரண்டு வருடங்களி மெஹ்பூபா முஃப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இடையே மோதல் அதிகரித்தது இதனால் மெகபூபாவுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதன் காரணமாக கடந்த கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடந்த போது காஷ்மீரிலும் லோக்சபா தேர்தல் நடந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா லோக்சபாவில்நிறைவேற்றியது. இதையடுத்து இன்று ராஜ்யசாபாவில் விவாதம் நடந்தது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆதரவு அளித்தன.

இதனால் ஜம்மு - காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ராஜ்யசபாவிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஜூலை 3 முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகப்போகிறது. ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக அங்கு நடைபெற வேண்டிய சட்டசபை தேர்தலை தள்ளி வைத்துக்கொண்டே மத்திய அரசு செல்வதாக கூறப்படுகிறது.

English summary
Rajya Sabha approves statutory resolution to extend President's rule in J&K for a further period of 6 months with effect from 3rd July 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X