டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளில் 1999-ல் ஒரே ஒருமுறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100%: வெங்கையா நாயுடு

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் 1999-ம் ஆண்டில் ஒரே ஒரு முறைதான் ராஜ்யசபாவில் எம்.பிக்கள் வருகை 100% ஆக இருந்ததாக துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ராஜய்சபா தலைவராகவும் மூன்று ஆண்டுகளை வெங்கையா நாயுடு நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் வெங்கையா நாயுடுவின் ஓராண்டு நிகழ்ச்சிகள் பங்கேற்பு தொடர்பான புத்தகத்தை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

Rajya Sabha clocks annual productivity of 100% only once in 1999. says Venkaiah Naidu

புத்தகத்தின் மின் பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். கடந்த ஒரு ஆண்டில் வெங்கையா நாயுடுவின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைக் கொண்ட 334 படங்களுடன் கூடியதாக இந்த 251 பக்க புத்தகம் அமைந்துள்ளது

இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

கொரோனா காலத்துக்கு முன்னர் மாதத்துக்கு 20 நிகழ்ச்சிகள் இருந்தது. அதேபோல் 70-க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகள் மற்றும் 14 பட்டமளிப்பு விழாக்களில் பேசி இருக்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜ்யசபாவில் மாற்றத்துக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக ராஜ்யசபாவின் செயல்திறன் குறைந்து கொண்டே வந்தது.

சென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்புசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு

கடந்த 20 ஆண்டுகளில் 1999-இல் ஒரே ஒரு முறை தான் 100 சதவீத உறுப்பினர் வருகையை ராஜ்யசபா கண்டது. ராஜ்யசபாவின் 3 கூட்டத் தொடர்களின் செயல்பாடுகளை தேர்தல் ஆண்டு கடுமையாக பாதித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் தலைமை வகித்த எட்டுக் கூட்டத் தொடர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் 65.50 சதவீதமாக இருந்தது. இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

English summary
Vice President and Rajya Sabha Chairman Venkaiah Naidu said that Rajya Sabha has clocked annual productivity of 100% only once in 1999 during the last 20 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X