டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல் வாக்குபதிவு நிறைவு.. பெரும் எதிர்பார்பை தூண்டிய 19 இடங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. யார் வெற்றி பெற்றார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.

Recommended Video

    Rajya Sabha Election : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 19 எம்.பி. இடங்கள்

    கொரோனா லாக்டவுனால் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இதனையடுத்து 24 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    Rajya Sabha Election 2020: 19 seats go to polls today

    இதில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் இரன்னா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும் அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியாவும் போட்டியின்றி தேர்வாகிவிட்டனர். இதனால் மீதமுள்ள 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.

    ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம்- ராஜஸ்தானில் 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. சற்று முன்னதாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட ஏராளமான எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா

    இதனிடையே காங்கிரஸ் பாஜக இடையே மணிப்பூரில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 19 இடங்களுக்குமான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. .

    English summary
    Elections for 19 Rajya Sabha seats spread across eight states will be held on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X