டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்.. ஆந்திராவில் 4 இடங்களையும் கைப்பற்றியது ஒய்.எஸ்.ஆர்.காங்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஆந்திராவில் 4 இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

Newest First Oldest First
7:55 PM, 19 Jun

ராஜ்யசபா தேர்தலில் தேவகவுடா, சரத் பவார், சிபு சோரன், ஜோதிராதித்ய சிந்தியா, கே.சி. வேணுகோபால் வெற்றி
6:39 PM, 19 Jun

ராஜ்யசபா தேர்தல்: ராஜஸ்தானில் காங். 2 இடங்களில் வென்றது- பாஜக 1 இடத்தில் வெற்றி. ம.பி.யில் பாஜக 2 இடங்களில் வெற்றி- காங்கிரஸ் 1 இடத்தில் வென்றது.
4:48 PM, 19 Jun

8 மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது, சற்று நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
4:44 PM, 19 Jun

ஆந்திராவில் மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுபோட 2 தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் வரவில்லை
4:44 PM, 19 Jun

இஎஸ்ஐ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அட்சன் நாயுடு மற்றும் கொரோனா தனிமையால் அனகனி சத்ய பிரசாத் ஆகியோர் வாக்களிக்க வில்லை
1:54 PM, 19 Jun

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் ராஜ்யசபா தேர்தலையொட்டி ஜெய்ப்பூரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில் வாக்களித்தார்
11:36 AM, 19 Jun

ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி அமராவதியில் சட்டசபை கட்டிடத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார். ஆந்திராவின் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
6:04 AM, 19 Jun

நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு இன்று நடைபெறும். தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா லாக்டவுனால் ராஜ்யசபா தேர்தல் நடக்காமல் இருந்தது.
6:51 PM, 18 Jun

ராஜ்யசபாவில் தற்போது பாஜகவிற்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் 9 எம்பி பதவியிடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
6:51 PM, 18 Jun

9 இடங்களை பாஜக வென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) ஒட்டுமொத்த எண்ணிக்கை 100 இடங்களாக உயர உள்ளது.
6:51 PM, 18 Jun

குதிரைபேர அச்சத்தால் ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தங்கியுள்ளனர்.

Rajya Sabha election will be held today for 24 seats
English summary
The Rajya Sabha election is scheduled on 19 June, with the National Democratic Alliance (NDA) expected to inch closer to a majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X