டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு ராஜ்யசபா அஞ்சலி

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமன் நாட்டின் சுல்தானாக விளங்கிய ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்துக்கு, ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.

அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவர் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத். அவர் கடந்த மாதம், தனது 79வது வயதில் உயிரிழந்தார்.

Rajya Sabha paid tribute to the departed Sultan of Oman

ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தவர்.

இவர் ஓமன் மன்னராக பதவிக்கு வந்தபோது, ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது. ஆனால் ஓமனை அப்படி மாற்றினார்.

வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!

எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எண்ணெய் வளத்தை மூலதனமாக்கினார். நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை ஓமனில் ஏற்படுத்தினார்.

இவரது மறைவுக்கு ராஜ்யசபா இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோருக்கும் ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.

English summary
The Rajya Sabha paid tribute to the departed Sultan of Oman, Qaboos Bin Said Al.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X