டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை சேனல்களும் ஒன்றாக இணைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தொலைக்காட்சி சேனல்களான மாநிலங்களவை தொலைக்காட்சி மற்றும் மக்களவைத் தொலைக்காட்சி ஆகியவை சன்சத் டிவி எனும் ஒரே சேனலாக இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி கபூர் அதன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Rajya Sabha TV and Lok Sabha TV merged as Sansad TV

மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராஜ்யசபா டிவி (RSTV) என்பது மாநிலங்களவையின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் சேனலாகும். ராஜ்யசபா நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பைத் தவிர, பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய தகவல்களையும் அளித்து வந்தது. குறிப்பாக, இந்த சேனல் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற வணிகங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது.

பீகாரில் திரிசங்கு ஆட்டத்தில் பாஜக... லோக் ஜனசக்தியில் இணைந்த பாஜக தலைவர்கள்... என்னதான் நடக்கிறது!!பீகாரில் திரிசங்கு ஆட்டத்தில் பாஜக... லோக் ஜனசக்தியில் இணைந்த பாஜக தலைவர்கள்... என்னதான் நடக்கிறது!!

அதேபோல், மக்களவை டிவி (LSTV) மத்திய அரசு நடவடிக்கைகள் மற்றும் பிற பொது விவகார நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. மேலும், மக்களவை நடவடிக்கைகளின் நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பையும் வழங்கியது.

இந்நிலையில், இவ்விரு அரசு டிவி சேனல்களும் ஒரே சேனலாக இணைக்கப்பட்டுள்ளன.

English summary
Rajya Sabha TV Lok Sabha TV merged Sansad TV - சன்சத் டிவி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X